🔗

அபூதாவூத்: 72

ஹதீஸின் தரம்: விபரம் கீழே


72. மேலுள்ள ஹதீஸின் கருத்தையே அபூஹுரைரா (ரலி) அறிவித்துள்ளனர். ஆனாலும் ‎இதன் தொடரில் வரும் (ஹம்மாத், முஃதமர்) இருவரும் நபி (ஸல்) அவர்கள் ‎சொன்னதாகக் கூறவில்லை. அதில் (அறிவிப்பாளர் அய்யூப் அவர்கள்) பூனை வாய் ‎வைத்து விட்டால் ஒரு தடவை கழுவ வேண்டும் என்பதை அதிகமாக ‎அறிவித்துள்ளார்.‎

‎(குறிப்பு: நாய் வாய்வைத்தல் சம்பந்தப்பட்ட விஷயம் நபி (ஸல்) அவர்கள் மூலம் ‎அறிவிக்கப் பட்டுள்ளது. பூனை வாய் வைத்தல் சம்பந்தப் பட்ட விஷயம் நபி (ஸல்) ‎அவர்கள் கூறியதாக வராமல் நபித் தோழர்கள் கூறியதாகவே வந்துள்ளது என இமாம் ‎முன்திரி குறிப்பிடுகின்றார்கள். இது திர்மிதீயிலும் காணப்படுகிறது. திர்மிதீ இமாம் ‎அவர்கள் இந்த ஹதீஸ் பல்வேறு வழிகளில் அறிவிக்கப் படுகிறது. ஆயினும் ‎அவற்றில் எல்லாம் பூனை வாய் வைத்தால் ஒரு முறை கழுவ வேண்டும் என கூறப் ‎படவில்லை எனத் தெரிவிக்கிறார்கள்.‎