اجْتَمَعَ أَبُو حُمَيْدٍ، وَأَبُو أُسَيْدٍ، وَسَهْلُ بْنُ سَعْدٍ، وَمُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ، فَذَكَرُوا صَلَاةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَبُو حُمَيْدٍ: أَنَا أَعْلَمُكُمْ بِصَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ بَعْضَ هَذَا، قَالَ: “ثُمَّ رَكَعَ فَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ كَأَنَّهُ قَابِضٌ عَلَيْهِمَا، وَوَتَّرَ يَدَيْهِ فَتَجَافَى عَنْ جَنْبَيْهِ، قَالَ: ثُمَّ سَجَدَ فَأَمْكَنَ أَنْفَهُ وَجَبْهَتَهُ وَنَحَّى يَدَيْهِ عَنْ جَنْبَيْهِ وَوَضَعَ كَفَّيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ حَتَّى رَجَعَ كُلُّ عَظْمٍ فِي مَوْضِعِهِ حَتَّى فَرَغَ، ثُمَّ جَلَسَ فَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى وَأَقْبَلَ بِصَدْرِ الْيُمْنَى عَلَى قِبْلَتِهِ وَوَضَعَ كَفَّهُ الْيُمْنَى عَلَى رُكْبَتِهِ الْيُمْنَى وَكَفَّهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ الْيُسْرَى ” وَأَشَارَ بِأُصْبُعِهِ،
734. அப்பாஸ் பின் ஸஹ்ல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுமைத் (ரலி), அபூஉஸைத் (ரலி), ஸஹ்ல் பின் ஸஃஅத் (ரலி), முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) ஆகியோர் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றிப் பேசிக்கொண்டார்கள். அப்போது அபூஹுமைத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றி உங்களை விட நான் நன்கு அறிந்தவன்” என்று கூறிவிட்டு அதில் சிலவற்றைக் குறிப்பிட்டு (பின்வருமாறு) விவரித்தார்கள்:
“பிறகு நபி (ஸல்) அவர்கள் ருகூஃ செய்தார்கள்; தனது கைகளை முழங்கால்களின் மீது, அவற்றைப் பற்றிக்கொண்டிருப்பதைப் போன்று வைத்தார்கள். தனது கைகளை (வில் நாண் போன்று) நேராக்கி (உறுதியாக்கி), அவற்றை விலாப்புறங்களிலிருந்து விலக்கி வைத்தார்கள்.
பிறகு ஸஜ்தாச் செய்தார்கள்; தனது மூக்கையும் நெற்றியையும் (தரையில்) அழுத்தமாக வைத்தார்கள். தனது கைகளை விலாப்புறங்களிலிருந்து விலக்கி, தனது இரு உள்ளங்கைகளையும் தோள்களுக்கு நேராக வைத்தார்கள்.
பிறகு ஒவ்வொரு எலும்பும் அதன் இடத்திற்குத் திரும்பும் வரை தனது தலையை உயர்த்தினார்கள். அவர்கள் (முழுமையாக) நிமிர்ந்து, அமரும் வரை (இவ்வாறே செய்தார்கள்).
பிறகு அமர்ந்தார்கள்; தனது இடது காலை விரித்து (அதன் மீது அமர்ந்து), வலது காலின் (விரல்) முன்பகுதியை கிப்லாவை முன்னோக்கி வைத்தார்கள். தனது வலது உள்ளங்கையை வலது முழங்கால் மீதும், இடது உள்ளங்கையை இடது முழங்கால் மீதும் வைத்து, தனது (ஆட்காட்டி) விரலால் சைக்கினை செய்தார்கள்”.
அபூ தாவூத் இமாம் கூறுகிறார்:
இந்த ஹதீஸை உத்பா இப்னு அபூஹகீம் அவர்கள் அப்துல்லாஹ் பின் ஈஸா —> அப்பாஸ் பின் ஸஹ்ல் என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். அதில் அவர் ‘தவர்ருக்’ (பிட்டத்தை தரையில் வைக்கும்) இருப்பைக் குறிப்பிடவில்லை. மற்ற விசயங்களை ஃபுலைஹ் அறிவித்துள்ள ஹதீஸில் உள்ளது போன்றே குறிப்பிட்டுள்ளார்.
ஹஸன் பின் ஹுர் என்பவரும் ஃபுலைஹ், உத்பா ஆகியோர் “இருப்பில் அமரும் முறை” பற்றி அறிவித்துள்ளது போன்றே அறிவித்துள்ளார்.