كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَضَعُ يَدَهُ الْيُمْنَى عَلَى يَدِهِ الْيُسْرَى، ثُمَّ يَشُدُّ بَيْنَهُمَا عَلَى صَدْرِهِ وَهُوَ فِي الصَّلَاةِ»
759. தாவூஸ் பின் கைஸான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் தமது வலது கையை இடது கையின் மீது வைத்து; அவ்விரு கைகளையும் (ஒன்றாகப்) பிடித்து, தமது நெஞ்சின் மீது வைத்திருப்பார்கள்.
அறிவிப்பவர்: ஸுலைமான் பின் மூஸா (ரஹ்)