🔗

அபூதாவூத்: 850

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ: «اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَعَافِنِي، وَاهْدِنِي، وَارْزُقْنِي»


பாடம்: 287

இரு ஸஜ்தாக்களுக்கு இடையே கூறவேண்டிய பிரார்த்தனை.

850. நபி (ஸல்) அவர்கள், இரு ஸஜ்தாக்களுக்கு இடையே உள்ள இருப்பில், “அல்லாஹும்மஃக்ஃபிர்லீ, வர்ஹம்னீ, வ ஆஃபினீ, வஹ்தினீ, வர்ஸுக்னீ

(பொருள்: அல்லாஹ்வே! என்னை மன்னிப்பாயாக! எனக்கு அருள் புரிவாயாக! எனக்கு உடல் நலத்தை தருவாயாக! எனக்கு நேர்வழி காட்டுவாயாக! எனக்கு உணவு வழங்குவாயாக!) என்று பிரார்த்தனை செய்வார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)