🔗

அபூதாவூத்: 859

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

«إِذَا قُمْتَ فَتَوَجَّهْتَ إِلَى الْقِبْلَةِ فَكَبِّرْ، ثُمَّ اقْرَأْ بِأُمِّ الْقُرْآنِ، وَبِمَا شَاءَ اللَّهُ أَنْ تَقْرَأَ، وَإِذَا رَكَعْتَ فَضَعْ رَاحَتَيْكَ عَلَى رُكْبَتَيْكَ، وَامْدُدْ ظَهْرَكَ»، وَقَالَ: «إِذَا سَجَدْتَ فَمَكِّنْ لِسُجُودِكَ، فَإِذَا رَفَعْتَ فَاقْعُدْ عَلَى فَخِذِكَ الْيُسْرَى»


859. ஏழு அறிவிப்புகளில் ஐந்தாம் அறிவிப்பு: ஹதீஸ் எண்-856 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. இதில்,

“(தொழுகைக்கு) நீ நின்றால் கிப்லாவை முன்னோக்கி தக்பீர் கூறி பின்பு ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்தையும், மேலும், நீ எதை ஓத அல்லாஹ் நாடுவானோ அதையும் (துணை அத்தியாயத்தையும்) ஓது. நீ ருகூஉ செய்தால் உனது முழங்காலின் மீது உனது உள்ளங்கையை வைத்து உனது முதுகை நேராக நிமிர்த்தி வை. நீ ஸஜ்தா செய்தால் (நெற்றியைப் பூமியில் பதித்து) உறுதியாக ஸஜ்தா செய்.

(ஸஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தினால் உனது (வலதுகாலை நட்டுவைத்து) இடது தொடையின் மீது அமர்ந்து கொள்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் (என்று கூடுதலாகக் காணப்படுகிறது).

அறிவிப்பவர்: ரிஃபாஆ பின் ராஃபிஃ (ரலி)