🔗

அபூதாவூத்: 861

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَقَصَّ هَذَا الْحَدِيثَ قَالَ فِيهِ: «فَتَوَضَّأْ كَمَا أَمَرَكَ اللَّهُ جَلَّ وَعَزَّ، ثُمَّ تَشَهَّدْ، فَأَقِمْ ثُمَّ كَبِّرْ، فَإِنْ كَانَ مَعَكَ قُرْآنٌ فَاقْرَأْ بِهِ، وَإِلَّا فَاحْمَدِ اللَّهَ وَكَبِّرْهُ وَهَلِّلْهُ»، وَقَالَ فِيهِ: «وَإِنِ انْتَقَصْتَ مِنْهُ شَيْئًا انْتَقَصْتَ مِنْ صَلَاتِكَ»


861. ஏழு அறிவிப்புகளில் ஏழாம் அறிவிப்பு: ஹதீஸ் எண்-856 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. இதில்,

“மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ் உனக்குக் கட்டளையிட்டுள்ளபடி நீ அங்கத் தூய்மை செய்துகொள். அது (அங்கத் தூய்மை) முடிந்த பின் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ் என்று பாங்கு சொல். பின்பு இகாமத் சொல்லி தொழுகைக்கு நின்ற பின் தக்பீர் கூறி, குர்ஆனிலிருந்து எதுவும் (மனனமாக) இருந்தால் அதனை ஓது.

குர்ஆனில் எதுவும் மனனம் இல்லையென்றால் “அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹு அக்பர், லாஇலாஹ இல்லல்லாஹ்” என்று சொல்.

இவற்றிலிருந்து எதுவும் நீ குறைவு செய்தால் உனது தொழுகையில் நீ குறைவு செய்துவிட்டாய்! (என்று அறிந்துக் கொள்!) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது).

அறிவிப்பவர்: ரிஃபாஆ பின் ராஃபிஃ (ரலி)