🔗

அபூதாவூத்: 89

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

كُنَّا عِنْدَ عَائِشَةَ فَجِيءَ بِطَعَامِهَا، فَقَامَ الْقَاسِمُ يُصَلِّي، فَقَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يُصَلَّى بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا وَهُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ»


89. நாங்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுடன் இருக்கும் போது அவர்களுக்கு உணவு ‎கொண்டு வரப்பட்டது. அப்போது (அபூபக்ர் ஸித்தீக் (ரலி)) அவர்களின் பேரன்) காஸிம் ‎அவர்கள் தொழத் துவங்கினர். அப்போது அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் உணவு ‎தயாராக இருக்கும் போது, மலஜல உபாதைகளை அடக்கிக் கொண்டு தொழக் கூடாது ‎என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் எனக் ‎கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அபூபக்ர் (ரஹ்)

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

யஹ்யா பின் ஸயீத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் இமாம் அஹ்மத், முஸத்தத், முஹம்மது பின் ஈஸா ஆகியோரில் முஹம்மது பின் ஈஸா அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் முஹம்மத் என்ற பெயருடன் இப்னு அபூபக்ர் என்று கூறினார். மற்ற இருவரும் அவ்வாறு கூறவில்லை. என்றாலும் மூவருமே (அப்துல்லாஹ் பின் முஹம்மது யார் என்று விளக்குவதற்கு) காஸிம் பின் முஹம்மத் என்பவரின் சகோதரர் என்று கூறினர்.