ثَلَاثٌ لَا يَحِلُّ لِأَحَدٍ أَنْ يَفْعَلَهُنَّ: لَا يَؤُمُّ رَجُلٌ قَوْمًا فَيَخُصُّ نَفْسَهُ بِالدُّعَاءِ دُونَهُمْ، فَإِنْ فَعَلَ فَقَدْ خَانَهُمْ، وَلَا يَنْظُرُ فِي قَعْرِ بَيْتٍ قَبْلَ أَنْ يَسْتَأْذِنَ، فَإِنْ فَعَلَ فَقَدْ دَخَلَ، وَلَا يُصَلِّي وَهُوَ حَقِنٌ حَتَّى يَتَخَفَّفَ
90. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று காரியங்களைச் செய்ய உங்களில் எவருக்கும் அனுமதி இல்லை.
1 . (ஒரு கூட்டத்தினருக்கு) தொழுகை நடத்துபவர் பிரார்த்தனை செய்யும் போது தமக்கு மட்டும் கேட்டுக்கொள்கிறார். (அவர்களை தனது பிரார்த்தனையில் இணைக்கவில்லை). அப்படி செய்தால் அவர், அவர்களுக்கு துரோகம் இழைத்து விட்டார்.
2 . ஒரு வீட்டில் நுழைய அனுமதி பெறுவதற்கு முன்பு, அவ்வீட்டின் உட்பகுதிகளை அவர் பார்க்கக் கூடாது. அவ்வாறு அவர் பார்த்து விட்டால் (அனுமதி பெறாமலேயே) வீட்டில் நுழைந்தவர் போலாவார்.
3 . மலஜலத்தை வெளியாக்கி தன் வயிற்றை இலகுவாக்கும் வரை, அதை அடக்கிக் கொண்டு தொழக்கூடாது.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)