🔗

al-adabul-mufrad-120: 120

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

إِنَّ زَوْجَ إِحْدَانَا يُرِيدُهَا فَتَمْنَعُهُ نَفْسَهَا ، إِمَّا أَنْ تَكُونَ غَضَبَى أَوْ لَمْ تَكُنْ نَشِيطَةً ، فَهَلْ عَلَيْنَا فِي ذَلِكَ مِنْ حَرَجٍ ؟ قَالَتْ : نَعَمْ ، إِنَّ مِنْ حَقِّهِ عَلَيْكِ أَنْ لَوْ أَرَادَكِ وَأَنْتِ عَلَى قَتَبٍ لَمْ تَمْنَعِيهِ ، قَالَتْ : قُلْتُ لَهَا : إِحْدَانَا تَحِيضُ ، وَلَيْسَ لَهَا وَلِزَوْجِهَا إِلاَّ فِرَاشٌ وَاحِدٌ أَوْ لِحَافٌ وَاحِدٌ ، فَكَيْفَ تَصْنَعُ ؟ قَالَتْ : لِتَشُدَّ عَلَيْهَا إِزَارَهَا ثُمَّ تَنَامُ مَعَهُ ، فَلَهُ مَا فَوْقَ ذَلِكَ ، مَعَ أَنِّي سَوْفَ أُخْبِرُكِ مَا صَنَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم : إِنَّهُ كَانَ لَيْلَتِي مِنْهُ ، فَطَحَنْتُ شَيْئًا مِنْ شَعِيرٍ ، فَجَعَلْتُ لَهُ قُرْصًا ، فَدَخَلَ فَرَدَّ الْبَابَ ، وَدَخَلَ إِلَى الْمَسْجِدِ ، وَكَانَ إِذَا أَرَادَ أَنْ يَنَامَ أَغْلَقَ الْبَابَ ، وَأَوْكَأَ الْقِرْبَةَ ، وَأَكْفَأَ الْقَدَحَ ، وَأطْفَأَ الْمِصْبَاحَ ، فَانْتَظَرْتُهُ أَنْ يَنْصَرِفَ فَأُطْعِمُهُ الْقُرْصَ ، فَلَمْ يَنْصَرِفْ ، حَتَّى غَلَبَنِي النَّوْمُ ، وَأَوْجَعَهُ الْبَرْدُ ، فَأَتَانِي فَأَقَامَنِي ثُمَّ قَالَ : أَدْفِئِينِي أَدْفِئِينِي ، فَقُلْتُ لَهُ : إِنِّي حَائِضٌ ، فَقَالَ : وَإِنْ ، اكْشِفِي عَنْ فَخِذَيْكِ ، فَكَشَفْتُ لَهُ عَنْ فَخِذَيَّ ، فَوَضَعَ خَدَّهُ وَرَأْسَهُ عَلَى فَخِذَيَّ حَتَّى دَفِئَ . فَأَقْبَلَتْ شَاةٌ لِجَارِنَا دَاجِنَةٌ فَدَخَلَتْ ، ثُمَّ عَمَدَتْ إِلَى الْقُرْصِ فَأَخَذَتْهُ ، ثُمَّ أَدْبَرَتْ بِهِ . قَالَتْ : وَقَلِقْتُ عَنْهُ ، وَاسْتَيْقَظَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَبَادَرْتُهَا إِلَى الْبَابِ ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم : خُذِي مَا أَدْرَكْتِ مِنْ قُرْصِكِ ، وَلاَ تُؤْذِي جَارَكِ فِي شَاتِهِ


நல்லொழுக்கமுள்ள அண்டைவீட்டார் பற்றிய பாடம்.

உமாரா இப்னு குராப் அவர்கள் தனது சிற்றன்னை முஃமின்களின் அன்னை ‘ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டதாகக் கூறினார்கள், “ஒரு பெண்ணின் கணவர் அவளை விரும்பினான், அவள் கோபமாகவோ அல்லது ஆர்வம் இல்லாததாலோ தன்னைக் கொடுக்க மறுத்துவிட்டால், அதில் ஏதேனும் தவறு இருக்கிறதா? என்று”ஆம்,” என்று அவர்கள் பதிலளித்தார்கள். “உங்கள் மீது அவர் வைத்திருக்கும் உரிமையின் ஒரு பகுதி என்னவென்றால், நீங்கள் ஒரு சேணத்தில் இருக்கும்போது அவர் உங்களை விரும்பினால், நீங்கள் அவரை மறுக்கக்கூடாது.” மேலும் நான் அவரிடம் கேட்டேன்” , ‘எங்களில் ஒருவர் மாதவிடாயாக இருந்தால், அவளுக்கும் அவரது கணவருக்கும் ஒரே ஒரு போர்வை மட்டும் இருந்தால், அவள் என்ன செய்ய வேண்டும்?’ என்று. அதற்கு அவர், ‘அவள் தன் போர்த்தியைச் சுற்றிக் கொண்டு அவனுடன் தூங்க வேண்டும். அதன் கீழ் பகுதியில் அவளும் அதன் மேல் இருப்பதை அவனும் பயன்படுத்திக் கொள்ளலாம். என்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் என்னுடன் ஒரு இரவில் என்ன செய்தார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். நான் கொஞ்சம் வாற் கோதுமை சமைத்து அவருக்ளுக்கு ரொட்டி செய்து வைத்தேன். அவர் உள்ளே வந்தவுடன், மீண்டும் வாசலுக்கு திரும்பி, பின்னர் பள்ளிவாசலுக்கு சென்றார்கள். அவர்கள் உறங்க விரும்பிய போது, ​​அவர் கதவை மூடி, தண்ணீர் பையை கட்டி வைத்து, குவளையை திரும்பி வைத்து , விலக்கை அணைத்தார்கள். நான் அவர்களுக்காக காத்திருந்தேன், அவர்கள் ரொட்டியை சாப்பிட்டார்கள். நான் தூங்கும் வரை அவர்கள் செல்லவில்லை. பின்னர் அவர்கள் குளிரை உணர்ந்தவுடன் என்னிடம் வந்து என்னை எழுப்பினார்கள். “என்னை சூடேற்று! என்னை சூடேற்று!” என்று கூறினார்கள். “நான் மாதவிடாயாக இருக்கிறேன்” என்று கூறினேன். “பின்னர் என் தொடைகளை காட்டும்படி கேட்டார்கள் ” அதனால் நான் என் ஆடையை  விலக்கி தொடைகளை காட்டினேன், அவர்கள் சூடாகும் வரை தனது கன்னத்தையும் தலையையும் என் தொடைகளில் வைத்தார்கள். அப்போது எங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கு சொந்தமான ஒரு வளர்ப்பு ஆடு உள்ளே வந்தது. அது குனிந்து ரொட்டியை எடுத்தது. நான் சென்று சுமையை எடுத்துச் சென்றேன். நான் நபி (ஸல்) அவர்களை நினைத்து கவலை அடைந்தைன். அவர்கள் எழுந்தார்கள். பின்னர் நான் அந்த ஆட்டை வாசலுக்கு விரட்டினேன். நபி (ஸல்) அவர்கள் என்ன நோக்கி “ரொட்டியில் உனக்கு கிடைத்ததை எடுத்துக் கொள், உன் அண்டை வீட்டாரின் ஆட்டை வேதனை செய்யாதே. என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உமாரா இப்னு குராப்