🔗

al-adabul-mufrad-650: 650

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ مَتِّعْنِي بِسَمْعِي وَبَصَرِي، وَاجْعَلْهُمَا الْوَارِثَ مِنِّي، وَانْصُرْنِي عَلَى عَدُوِّي، وَأَرِنِي مِنْهُ ثَأْرِي»


650. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹும்ம மத்திஃனீ பிஸம்ஈ, வ பஸரீ, வஜ்அல்ஹுமல் வாரிஸ மின்னீ, வன்ஸுர்னீ அலா அதுவ்வீ, வ அரினீ மின்ஹு ஸஃரீ” எனும் பிரார்த்தனையை கேட்பவர்களாக இருந்தார்கள்.

(பொருள்: அல்லாஹ்வே! எனது செவியின் மூலமும், பார்வையின் மூலமும் எனக்கு நற்பலன்களை வழங்குவாயாக!. வயதான காலத்திலும் அவ்விரண்டையும் எனக்கு சீராக்குவாயாக! எனது எதிரிக்கு எதிராக எனக்கு உதவி செய்வாயாக! அவரை நான் பழிவாங்குவதை எனக்கு காட்டுவாயாக!)