🔗

al-adabul-mufrad-779: 779

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

إِذَا طَلَبَ أَحَدُكُمُ الْحَاجَةَ فَلْيَطْلُبْهَا طَلَبًا يَسِيرًا، فَإِنَّمَا لَهُ مَا قُدِّرَ لَهُ، وَلَا يَأْتِي أَحَدُكُمْ صَاحِبَهُ فَيَمْدَحَهُ، فَيَقْطَعَ ظَهْرَهُ


பாடம்:

ஒருவரின் உதவி தேவையென்றால் அவரிடம் சாதாரணமாகக் கேட்க வேண்டும்; அவரைப் புகழக்கூடாது.

779. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உங்களில் ஒருவர் (மற்றவரிடம்) உதவிக் கேட்டால் அதை சாதாரணமாகக் கேட்கட்டும். ஏனெனில் அவருக்கு விதியில் எழுதப்பட்டதே கிடைக்கும். உதவி செய்பவரிடம் வந்து அவரைப் புகழ்ந்து; அவரின் முதுகை முறித்து விடவேண்டாம்.

அறிவிப்பவர்: அபுல்அஹ்வஸ் (ரஹ்)