🔗

alilal-ibn-abi-hatim-1093: 1093

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

عليكُم بِهذا البياضِ ، فليلبسهُ أحياؤُكُم ، وكفِّنُوا فِيهِ موتاكُم ، فإِنّهُ مِن خيرِ ثِيابِكُم ، أو قال : لِباسِكُم.

قال أبِي : لم يُتابِع معمرٌ على توصِيلِ هذا الحدِيثِ ، وإِنّما يروِيهِ عن أبِي قِلابة ، عن سمُرة ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم.


1093.

இதில் இரண்டு அறிவிப்பாளர்தொடர் உள்ளது.

1 . அஹ்மத் —> அப்துர்ரஸ்ஸாக் —> மஃமர் —> அய்யூப் —> அபூகிலாபா —> அபுல்முஹல்லப் —> ஸமுரா —> நபி (ஸல்).

2 . அஹ்மத் —> ரவ்ஹ் பின் உபாதா —> ஸயீத் பின் அபூஅரூபா —> அய்யூப் —> அபூகிலாபா —> அபுல்முஹல்லப் —> ஸமுரா —> நபி (ஸல்).

இதன் இரண்டு அறிவிப்பாளர்தொடரில் மஃமர் வழியாக வரும் செய்தி பற்றி, அபூஹாதிம் அவர்கள், மஃமர் மட்டுமே அய்யூப் —> அபூகிலாபா —> அபுல்முஹல்லப் —> ஸமுரா என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கிறார். மற்றவர்கள் அபூகிலாபா —> ஸமுரா என்று இடையில் அபுல்முஹல்லபை கூறாமல் அறிவிக்கின்றனர் என்பதால் இது முன்கதிஃ என்ற கருத்தில் கூறியுள்ளார்.