🔗

alilal-ibn-abi-hatim-2209: 2209

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

احذَرُوا بَيتًا يُقالُ لَهُ : الحَمّامُ قالُوا : يا رَسُولَ اللهِ ، إِنَّهُ يُذهِبُ الدَّرَنَ وَيُنَقِّي الوَسَخَ ، قالَ : فاستَتِرُوا.
قالَ أَبِي : إِنَّما يَروُونَهُ عَن طاوُسٍ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ، مُرسَلاً.


2209. இப்னு அபூஹாதிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்:

நான் எனது தந்தை அபூஹாதிம் அவர்களிடம், ஸுஃப்யான் —> இப்னு தாவூஸ் —> தாவூஸ் —> இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் யஃலா பின் உபைத் அவர்கள் அறிவிக்கும் (கீழ்க்கண்ட) செய்தி குறித்துக் கேட்டேன்.

“(ஹம்மாம் என்று கூறப்படும்) பொதுக் குளியலறையை விட்டு நீங்கள் தவிர்ந்துக் கொள்ளுங்கள்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! அங்கு குளிப்பது அழுக்குகளைப் போக்குகிறதே!’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால் அங்கு உங்கள் மறைவிடங்களை மறைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.


அதற்கு எனது தந்தை அபூஹாதிம் அவர்கள், இந்தச் செய்தியை யஃலா பின் உபைத் அல்லாத மற்றவர்கள் தாவூஸ் (ரஹ்) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் ‘முர்ஸலாக-நபித்தோழரைக் குறிப்பிடாமல்’ அறிவித்துள்ளனர் என்று கூறினார்.