🔗

alilal-ibn-abi-hatim-26: 26

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

رأيتُ ربِّي عزّ وجلّ وذكر الحدِيث فِي إسباغ الوضوء ونحوه.
قال أبِي : هذا رواهُ الولِيدُ بن مُسلِم وصدقة ، عنِ ابنِ جابِر ، قال : كُنّا مع مكحولٍ فمرّ بِهِ خالِد بن اللجلاج ، فقال مكحول : يا أبا إِبراهِيم ، حدّثنا ، فقال حدّثنِي ابن عائش الحضرمي ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم.
قال أبِي : وهذا أشبهُ ، وقتادة يُقال : لم يسمع من أبِي قِلابة إِلاَّ أحرفًا ، فإنه وقع إِليهِ كتابٌ من كتبِ أبِي قِلابة ، فلم يميزوا بين عَبد الرّحمنِ بن عايش ، وبين ابن عبّاس.
قال أبِي : وروى هذا الحديث جهضمُ بن عَبدِ اللهِ اليمامي ، وموسى بن خلف العمي ، عن يحيى بنِ أبِي كثِيرٍ ، عن زيدِ بنِ سلام ، عن جدِّهِ : ممطور ، عن أبِي عَبدِ الرّحمنِ السكسكي ، عن مالِكِ بنِ يخامر ، عن معاذ بن جبل ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم.
قال أبِي : وهذا أشبهُ من حدِيث ابن جابِر.


26. இப்னு அபூஹாதிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் எனது தந்தை அபூஹாதிம் அவர்களிடம், முஆத் பின் ஹிஷாம் அவர்கள், தனது தந்தை ஹிஷாம் —> கதாதா —>அபூகிலாபா —> காலித் பின் லஜ்லாஜ் —> இப்னு அப்பாஸ் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில், “நான் என்னுடைய ரப்பை கண்ணியமிக்கவனாகவும் மகத்துவமிக்கவனாகவும் கண்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தியும்; உளூவை முழுமையாகச் செய்வது போன்ற விஷயங்கள் கூறப்பட்டுள்ள செய்தியுமான இதைப் பற்றி கேட்டேன்.


அதற்கு எனது தந்தை (அபூஹாதிம்) கூறினார்:

இந்த ஹதீஸை வலீத் பின் முஸ்லிம், ஸதகா ஆகிய இருவரும் இப்னு ஜாபிர் வழியாக அறிவித்துள்ளனர்.

இப்னு ஜாபிர் கூறினார்:

‘நாங்கள் மக்ஹூல் உடன் இருந்தோம். அப்போது காலித் பின் லஜ்லாஜ் அவரை கடந்து சென்றார். மக்ஹூல் கூறினார்: அபூஇப்ராஹீமே! எங்களிடம் ஹதீஸ் கூறுங்கள்.’ அப்போது காலித் பின் லஜ்லாஜ் கூறினார்: ‘இப்னு ஆயிஷ் அல்-ஹள்ரமீ அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்து எனக்கு இந்த ஹதீஸை அறிவித்தார் என்று கூறினார்.


எனது தந்தை அபூஹாதிம் கூறினார்: “இதுவே மிகவும் சரியானதாகத் தோன்றுகிறது. மேலும், கதாதா அவர்கள் அபூகிலாபாவிடமிருந்து சில எழுத்துக்களைத் தவிர வேறு எதுவும் செவியுற்றதில்லை என்று கூறப்படுகிறது. அபூகிலாபாவின் சில நூல்கள் அவரிடம் கிடைத்திருக்கின்றன. அதிலிருந்து அவர் அறிவிப்பார். இதைக் கேட்டவர்கள் அப்துர்ரஹ்மான் பின் ஆயிஷ்க்கும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் இடையில் வேறுபடுத்தி பார்க்க தவறிவிட்டார்கள்.


எனது தந்தை மேலும் கூறினார்:

இந்த ஹதீஸை ஜஹ்ளம் பின் அப்துல்லாஹ் அல்யமாமீ, மூஸா பின் கலஃப் அல்அம்மீ ஆகிய இருவரும் யஹ்யா பின் அபூகஸீர் —>  ஸைத் பின் ஸல்லாம் —> மம்தூர் (ஸைத் பின் ஸல்லாம் அவர்களின் பாட்டனார்) → அபூஅப்துர்ரஹ்மான் –> மாலிக் பின் யுகாமிர் —> முஆத் பின் ஜபல் (ரலி) —>நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.

இது இப்னு ஜாபிர் அவர்களின் ஹதீஸை விடவும் சரியானதாகத் தோன்றுகிறது.