«أُمَّتِي أَمَةٌ مَرْحُومَةٌ، لَا عَذَابَ عَلَيْهَا فِي الْآخِرَةِ،
فَإِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ، دُفِعَ إِلَى كُلِّ رَجُلٍ مِنَ الْمُسْلِمِينَ رَجُلٌ مِنْ أَهْلِ الْكِتَابَيْنِ، فَيُقَالَ: يَا مُسْلِمُ، هَذَا فِدَاؤُكَ مِنَ النَّارِ»
بسم الله الرحمن الرحيم
அளவிலா அருளாளன், நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அத்தியாயம்: 1
அலிஃப் வரிசை.
(எனது ஆசிரியர்களில்) அஹ்மத் என்ற பெயருடையவர்களின் ஹதீஸ்கள்.
1 . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது சமுதாயம் இரக்கத்திற்குரிய சமுதாயம். மறுமையில் அதற்கு வேதனையில்லை.
மறுமைநாளில் ஒவ்வொரு முஸ்லிமிடமும் (நமக்கு முன்) வேதம்கொடுக்கப்பட்ட யூத, கிருத்துவ சமுதாயத்திலிருந்து ஒருவரை கொடுத்து “முஸ்லிமே! இவர் தான் உனக்கு பதிலாக நரகில் இருப்பார்” என்று கூறப்படும்.
அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)