🔗

almujam-alawsat-2753: 2753

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَى صَبِيٍّ أَوْ صَبِيَّةٍ فَقَالَ: «لَوْ كَانَ نَجَا أَحَدٌ مِنْ ضَمَّةِ الْقَبْرِ لَنَجَا هَذَا الصَّبِيُّ»


2753. நபி (ஸல்) அவர்கள், ஒரு சிறுவன் அல்லது சிறுமிக்கு ஜனாஸாத் தொழுகை தொழுவித்தார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்: மண்ணைறையின் நெருக்கடியிலிருந்து யாரேனும் தப்பித்திருந்தால், இந்தச் சிறுவன் நிச்சயமாகத் தப்பித்திருப்பான்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

தப்ரானீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை ஸுமாமா பின் அப்துல்லாஹ் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடமிருந்து ஹம்மாத் பின் ஸலமா அவர்கள் மட்டுமே அறிவித்துள்ளார்.