🔗

almujam-alawsat-2757: 2757

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَعَى فِي بَطْنِ الْمَسِيلِ قَالَ: «اللَّهُمَّ اغْفِرْ وَارْحَمْ، وَأَنْتَ الْأَعَزُّ الْأَكْرَمُ»


2757. நபி (ஸல்) அவர்கள் நீரோடை ஓடும் பள்ளமான இடத்தில் விரைந்து நடந்தால், “அல்லாஹும் மஃக்ஃபிர் வர்ஹம், வ அன்(த்)தல் அஅஸ்ஸுல் அக்ரம்” என்று கூறுவார்கள்.

(பொருள்: அல்லாஹ்வே! மன்னிப்பாயாக! மேலும், கருணை காட்டுவாயாக! நீயே எல்லோரையும்விட மிகவும் கண்ணியமானவனும், மிக்க கொடையாளியும் ஆவாய்!)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


தப்ரானீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை அபூஇஸ்ஹாக் அவர்களிடமிருந்து லைஸ் பின் அபூஸுலைம் என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார். மேலும் இவரிடமிருந்து அப்துல்வாரிஸ் அவர்கள் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார்.