مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَجُلٍ وَاضِعٍ رِجْلَهُ عَلَى صَفْحَةِ شَاةٍ وَهُوَ يُحِدُّ شَفْرَتَهُ وَهِيَ تَلْحَظُ إِلَيْهِ بِبَصَرِهَا، فَقَالَ: «أَفَلَا قَبْلَ هَذَا تُرِيدُ أَنْ تُمِيتَهَا مَوْتَتَيْنِ»
3590. ஒருவர் ஓர் ஆட்டைப் படுக்க வைத்து, அதன் பக்கவாட்டில் தனது காலை வைத்து, தனது கத்தியைக் கூர் தீட்டிக் கொண்டிருந்தார். அந்த ஆடு அவரையே பார்த்துக் கொண்டிருந்தது.
அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரைக் கடந்துச் சென்றார்கள். அதனைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “இதற்கு முன்பே (கத்தியைக் கூர் தீட்டி) வைத்திருக்கக் கூடாதா? இரண்டு முறை அதை மரணிக்கச் செய்ய விரும்புகிறாயா?” என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
தப்ரானீ இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தியை, ஆஸிம் பின் ஸுலைமான் —> இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அப்துர்ரஹீம் பின் ஸுலைமான் அவர்கள் மட்டுமே மவ்ஸூலாக அறிவித்துள்ளார்.
மேலும், அப்துர்ரஹீம் பின் ஸுலைமான் அவர்களிடமிருந்து யூஸுஃப் பின் அதீ மட்டுமே இதை தனித்து அறிவித்துள்ளார்.