«إِنَّ أَزْوَاجَ أَهْلِ الْجَنَّةِ لَيُغَنِّينَ أَزْوَاجَهُنَّ بِأَحْسَنِ أَصْوَاتٍ سَمِعَهَا أَحَدٌ قَطُّ. إِنَّ مِمَّا يُغَنِّينَ بِهِ: نَحْنُ الْخَيْرَاتُ الْحِسَانْ. أَزْوَاجُ قَوْمٍ كِرَامْ. يَنْظُرْنَ بِقُرَّةِ أَعْيَانْ. وَإِنَّ مِمَّا يُغَنِّينَ بِهِ: نَحْنُ الْخَالِدَاتُ فَلَا يَمُتْنَهْ. نَحْنُ الْآمِنَاتُ فَلَا يَخَفْنَهْ. نَحْنُ الْمُقِيمَاتُ فَلَا يَظْعَنَّهْ»
4917. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கவாசிகளின் மனைவியர், தங்களின் கணவர்களுக்காக அழகிய குரலில் பாடுவார்கள். (அதுபோன்ற) அழகான குரலை இதுவரை யாரும் கேட்டிருக்கமாட்டார்கள்.
அவர்களின் பாடல்களில் சிலவை:
(நாங்கள் நல்ல பேரழகிகள்; சங்கைக்குரியோரின் மனைவியர்; கண்குளிர (தன் கணவரைக்) கண்டு ரசிப்பவர்கள்,
நாங்கள் நீடித்து இருப்போம்; மடிந்து போகமாட்டோம், நாங்கள் பாதுகாப்பு பெற்றோர்; எனவே பயப்படமாட்டோம், நாங்கள் நிரந்தரமாக இங்கே இருப்போம்; இதிலிருந்து வெளியேற மாட்டோம்)
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)