🔗

almujam-alawsat-5081: 5081

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الْأَعْمَالِ أَفْضَلُ؟ قَالَ: «إِدْخَالُكَ السُّرُورَ عَلَى مُؤْمِنٍ أَشْبَعْتَ جَوْعَتَهُ، أَوْ كَسَوْتَ عُرْيَهُ، أَوْ قَضَيْتَ لَهُ حَاجَةً»


5081. உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “செயல்களில் மிகவும் சிறந்தது எது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “ஒரு முஃமினுக்கு நீர் மகிழ்ச்சியை ஏற்படுத்துவது, அதாவது அவரது பசியைப் போக்குவது, அல்லது அவரது மானத்தை மறைப்பது (ஆடையளிப்பது), அல்லது அவரது தேவையை நிறைவேற்றுவது ஆகும்” என்று கூறினார்கள்.


…இந்தச் செய்தியை கஸீர் அந்நவ்வா என்பாரிடமிருந்து அலீ பின் ஹாஷிம் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை. இதனை முஹம்மத் பின் பஷீர் தனித்து அறிவிக்கிறார். மேலும், உமர் (ரலி) அவர்களிடமிருந்து இந்த அறிவிப்பாளர் தொடர் வழியாகவே தவிர வேறு எந்த வழியிலும் இது அறிவிக்கப்படவில்லை.