«تُؤْخَذُ صَدَقَاتُ أَهْلِ الْبَادِيَةِ عَلَى مِيَاهِهِمْ، وَبَأَفْنِيَتِهِمْ»
5115. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கிராமப்புற மக்களின் (கால்நடைகளுக்கான) ஸகாத்தை, அவர்களுடைய நீர்த்துறைகளில் அல்லது அவர்களுடைய வீடுகளுக்கு வெளியேயுள்ள திறந்த வெளிகளில் (முற்றங்களில்) வசூலிக்க வேண்டும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
தப்ரானீ இமாம் கூறுகிறார்:
இந்த ஹதீஸை அப்துல்லாஹ் பின் அபூபக்ர் அவர்களிடமிருந்து அப்துல்மலிக் பின் முஹம்மத் பின் அபூபக்ர் அவர்கள் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை. மேலும் அப்துல்மலிக் பின் முஹம்மத் அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் அல்இஜ்லீ அவர்கள் மட்டுமே இதை தனித்து அறிவித்துள்ளார்.