🔗

almujam-alawsat-5902: 5902

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«إِنَّ نَفْسَ الْمُؤْمِنِ تَخْرُجُ رَشْحًا، وَلَا أُحِبُّ مَوْتًا كَمَوْتِ الْحِمَارِ» ، قِيلَ: وَمَا مَوْتُ الْحِمَارِ؟ قَالَ: «مَوْتُ الْفَجْأَةِ»

قَالَ: «وَرُوحُ الْكَافِرِ تَخْرُجُ مِنْ أَشْدَاقِهِ»


5902. இறைநம்பிக்கையாளரின் உயிர் வியர்வை வர (இலேசான சிரமத்துடன்) வெளியேறும். கழுதை இறப்பது போன்று இறப்பதை நான் விரும்பமாட்டேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களிடம், “கழுதை இறப்பது போன்று என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “திடீரென இறந்துவிடுவது” என்று பதிலளித்தார்கள்.

பின்பு இறைமறுப்பாளரின் உயிர், தாடை வழியாக வெளியேறுகிறது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)