🔗

almujam-alawsat-8230: 8230

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

تَذَاكَرْنَا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّمَا أَفْضَلُ: مَسْجِدُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَوْ مَسْجِدُ بَيْتِ الْمَقْدِسِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلَاةٌ فِي مَسْجِدِي أَفْضَلُ مِنْ أَرْبَعِ صَلَوَاتٍ فِيهِ، وَلَنِعْمَ الْمُصَلَّى، وَلَيُوشِكَنَّ أَنْ يَكُونَ لِلرَّجُلِ مِثْلُ سِيَةِ قَوْسِهِ مِنَ الْأَرْضِ حَيْثُ يَرَى بَيْتَ الْمَقْدِسِ خَيْرًا لَهُ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا»


8230. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தபோது, “மஸ்ஜிதுன் நபவீ பள்ளிவாசல் சிறந்ததா? அல்லது பைத்துல் மக்திஸ் பள்ளிவாசல் சிறந்ததா? என்று உரையாடிக்கொண்டிருந்தோம்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்னுடைய (இந்த மஸ்ஜிதுன் நபவீ) பள்ளிவாசலில் ஒரு தொழுகை தொழுவது, பைத்துல் மக்திஸ் பள்ளிவாசலில் தொழும் நான்கு தொழுகைகளை விடச் சிறந்தது.

“பைத்துல் மக்திஸ் தொழும் இடங்களில் நல்லது. பைத்துல் மக்திஸை பார்க்கும் தூரத்தில் ஒரு வில் வளையும் அளவுக்காவது ஒருவருக்கு இடம் இருப்பது இந்த உலகத்தையும், இந்த உலகிலுள்ள அனைத்தையும் விட சிறந்தது எனக் கருதும் நிலை (மறுமை நாளுக்கு நெருக்கத்தில்) ஏற்படும்” என்று கூறினார்கள்.