🔗

almujam-alawsat-9278: 9278

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«تُنْسَخُ دَوَاوِينُ أَهْلِ الْأَرْضِ فِي دَوَاوِينِ أَهْلِ السَّمَاءِ فِي كُلِّ اثْنَيْنٍ وَخَمِيسٍ، فَيُغْفَرُ لِكُلِّ مُسْلِمٍ لَا يُشْرَكُ بِاللَّهِ شَيْئًا إِلَّا رَجُلًا بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ»


9278. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பூமியில் வசிப்போரின் செயல்பதிவேடுகள், ஒவ்வொரு திங்கள், வியாழக் கிழமைகளில் வானில் இருப்போரிடம் நகல் எடுக்கப்படும். அப்போது அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காத ஒவ்வொரு முஸ்லிமான மனிதருக்கும் மன்னிப்பு வழங்கப்படுகிறது; தமக்கும் தம் (முஸ்லிம்) சகோதரருக்கும் இடையே பகைமையுள்ள மனிதரைத் தவிர.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)