🔗

almujam-alawsat-9325: 9325

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

«كَيْفَ بِكُمْ إِذَا فَسَقَ شَبَابُكُمْ، وَطَغَى نِسَاؤُكُمْ؟» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ ذَلِكَ لَكَائِنٌ؟ قَالَ: «وَشَرٌّ مِنْ ذَلِكَ سَيَكُونُ، كَيْفَ بِكُمْ إِذَا رَأَيْتُمُ الْمَعْرُوفَ مُنْكَرًا وَالْمُنْكَرَ مَعْرُوفًا؟»


9325. மக்களே! உங்களில் உள்ள இளைஞர்கள் பாவம் செய்தும்,  பெண்கள் வரம்புமீறியும் நடந்தால் உங்கள் நிலை எப்படி இருக்கும்? என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள், அல்லாஹ்வின் தூதரே! இப்படியும் நடக்குமா? என்று (ஆச்சரியமாகக்) கேட்டனர். அதற்கு, ஆம் இதை விட கடுமையான விசயமும் நடக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேலும், நீங்கள் நன்மையை தீமையாகவும்; தீமையை நன்மையாகவும் கருதும் நிலை ஏற்பட்டால் உங்கள் நிலை எப்படி இருக்கும்? என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)