«إِنَّ صَدَقَةَ السِّرِّ تُطْفِئُ غَضَبَ الرَّبِّ، وَإِنَّ صَنَائِعَ الْمَعْرُوفِ تَقِي مَصَارِعَ السَّوْءِ، وَإِنَّ صِلَةَ الرَّحِمِ تَزِيدُ فِي الْعُمُرِ، وَتَقِي الْفَقْرَ. وَأَكْثِرُوا مِنْ قَوْلِ: لَا حَوْلَ وَلَا وَقُوَّةَ إِلَّا بِاللَّهِ، فَإِنَّهَا كَنْزٌ مِنْ كُنُوزِ الْجَنَّةِ، وَإِنَّ فِيهَا شِفَاءً مِنْ تِسْعَةٍ وَتِسْعِينَ دَاءً، أَدْنَاهَا الْهَمُّ»
943. முஆவியா பின் ஹைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இரகசியமாக தர்மம் செய்வது இறைவனின் கோபத்தை தணித்துவிடும். நன்மைகள் தீமைகளை வீழ்த்திவிடும். உறவை பேணி நடப்பது ஆயுளை அதிகரிக்க செய்யும். வறுமையை நீக்கும்.
லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்பதை அதிகமாக கூறுங்கள். ஏனெனில், அது சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும்.
மேலும் அதில் தொண்ணூற்று ஒன்பது வகையான நோய்களுக்கு மருந்துள்ளது. அதில் குறைந்த பட்சம் கவலை என்னும் நோயிக்கும் மருந்தாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.