أَنَّ رَجُلًا مِنَ الْأَنْصَارِ كَانَ لَهُ فَحْلَانِِ فاغَتَلَمَا، فَأَدْخَلَهُمَا حَائِطًا فَسَدَّ عَلَيْهِمَا الْبَابَ، ثُمَّ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَرَادَ أَنْ يَدْعُوَ لَهُ وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدٌ وَمَعَهُ نَفَرٌ مِنَ الْأَنْصَارِ فَقَالَ: يَا نَبِيَّ اللهِ إِنِّي جِئْتُ فِي حَاجَةٍ وَإِنَّ فَحْلَيْنِ لِي اغْتَلَمَا فَأَدْخَلْتُهُمَا حَائِطًا، وسَدَدْتُ الْبَابَ عَلَيْهِمَا، فَأُحِبُّ أَنْ تَدْعُوَ لِي أَنْ يُسَخِّرَهُما اللهُ لِي فَقَالَ لِأَصْحَابِهِ: «قُومُوا مَعَنَا» فَذَهَبَ حَتَّى أَتَى الْبَابَ فَقَالَ: «افْتَحْ» فَأَشْفَقَ الرَّجُلُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «افْتَحْ» فَفَتَحَ الْبَابَ فَإِذَا أَحَدُ الْفَحْلَيْنِ قَرِيبٌ مِنَ الْبَابِ، فَلَمَّا رَأَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَجَدَ لَهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ائْتِنِي بِشَيْءٍ أَشَدُّ بِهِ رَأْسَهُ، وأُمْكِنُكَ مِنْهُ» فَجَاءَ بحطامٍ فَشَدَّ بِهِ رَأْسَهُ، وأَمْكَنَهُ مِنْهُ، ثُمَّ مَشَيَا إِلَى أَقْصَى الْحَائِطِ إِلَى الْفَحْلِ الْآخَرِ، فَلَمَّا رَآهُ وَقَعَ لَهُ سَاجِدًا فَقَالَ لِلرَّجُلِ: «ائْتِنِي بِشَيْءٍ أَشَدُّ بِهِ رَأْسَهُ» فَشَدَّ رَأْسَهُ وأَمْكَنَهُ مِنْهُ فَقَالَ: «اذْهَبْ فَإِنَّهُمَا لَا يَعْصيانِكَ» فَلَمَّا رَأَى أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَلِكَ قَالُوا: يَا رَسُولَ اللهِ، هَذَانِ فَحْلَانِ لَا يَعْقِلَانِ سَجَدَا لَكَ أَفَلَا نَسْجُدُ لَكَ قَالَ: «لَا آمُرُ أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ وَلَوْ أَمَرْتُ أَحَدًا يَسْجُدُ لِأَحَدٍ لَأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا»
12003. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஓர் அன்சாரித் தோழருக்குச் சொந்தமான இரண்டு ஒட்டகங்கள் வெறிபிடித்த நிலையில் இருந்தன. அவர் அவற்றை ஓர் இடத்திற்குள் கொண்டு சென்று, அதன் கதவை மூடினார். பிறகு, நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்க, சில அன்சாரித் தோழர்களும் அவர்களுடன் இருந்தனர். அந்த மனிதர் தமக்காகப் பிரார்த்திக்கும்படி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அவர், “இறைத்தூதர் அவர்களே! எனக்கு ஓர் அத்தியாவசியத் தேவை ஏற்பட்டுள்ளது. எனது இரண்டு ஒட்டகங்களும் வெறிபிடித்துவிட்டதால், அவற்றை ஓர் இடத்திற்குள் அடைத்து கதவையும் மூடிவிட்டேன். அவற்றை அல்லாஹ் எனக்கு வசப்படுத்தித் தரும்படி நீங்கள் பிரார்த்திக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், “எங்களுடன் வாருங்கள்” எனக் கூறினார்கள். பிறகு, கதவு இருக்கும் இடத்தை அடைந்ததும், “திற” என்றார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அந்த மனிதர் அஞ்சியதால், உடனடியாகத் திறக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் மீண்டும், “திற” எனக் கூறினார்கள். கதவு திறக்கப்பட்டது. இரண்டு ஒட்டகங்களில் ஒன்று கதவுக்கு அருகிலேயே இருந்தது. அது நபி (ஸல்) அவர்களைப் பார்த்ததும், அவர்களுக்கு ஸஜ்தா செய்தது.
நபி (ஸல்) அவர்கள், “நான் அதன் தலையைக் கட்டுவதற்கு ஏதேனும் கொண்டு வா” என்றார்கள். அவர் ஒரு கயிற்றைக் கொண்டு வந்ததும், அதன் தலையை நபி (ஸல்) கட்டினார்கள். அவர் அதைப் பிடித்துக்கொண்டார். பிறகு, இருவரும் அந்த இடத்தின் மறுமுனைக்குச் சென்று மற்ற ஒட்டகத்தின் அருகே சென்றனர். அதுவும் நபி (ஸல்) அவர்களைப் பார்த்ததும், சஜ்தா செய்தபடி விழுந்தது. நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதரிடம், “அதன் தலையைக் கட்ட ஒரு பொருளைக் கொண்டு வா” என்றார்கள். அவர் அதன் தலையைக் கட்டியதும், அதையும் பிடித்துக்கொண்டார்.
பிறகு நபி (ஸல்) அவர்கள், “செல்லுங்கள்! அவை இரண்டும் உமக்கு மாறு செய்யாது” என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் இதைக் கண்டபோது, “இறைத்தூதர் அவர்களே! அறிவு இல்லாத இந்த இரண்டு ஒட்டகங்களும் உங்களுக்குச் ஸஜ்தா செய்துள்ளன. நாங்கள் உங்களுக்குச் ஸஜ்தா செய்ய வேண்டாமா?” என்று கேட்டார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எவரும் யாருக்கும் ஸஜ்தா செய்ய நான் கட்டளையிட மாட்டேன். ஒருவரை மற்றொருவருக்கு சஜ்தா செய்ய நான் கட்டளையிட்டிருந்தால், மனைவியை அவளது கணவனுக்குச் ஸஜ்தா செய்ய நான் கட்டளையிட்டிருப்பேன்” என்று கூறினார்கள்.