🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 12185

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

الْبَيْتُ الْمَعْمُورُ: فِي السَّمَاءِ يُقَالُ لَهُ الصراحُ، وَهُوَ عَلَى مِثْلِ بَيْتِ الْحَرَامِ بِحِيَالِهِ لَوْ سَقَطَ لَسَقْطَ عَلَيْهِ يَدْخُلُهُ كُلَّ يَوْمٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ لَمْ يَرَوْنَهُ قَطُّ، وَإِنَّ لَهُ فِي السَّمَاءِ حُرْمَةٌ قَدْرَ حُرْمَةِ مَكَّةَ “

قَالَ: «وَيَدْخُلُ الْبَيْتَ كُلَّ يَوْمٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ لَا يُدْخِلُونَهُ أَبَدًا»


12185. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“அல்பைத்துல் மஃமூர்” வானத்தில் உள்ளது. அதற்கு “அஸ்ஸுராஹ்” என்று கூறப்படும். மேலும் அது பைதுல் ஹராம் என்ற கஅபா பள்ளியைப் போன்றதாகும். அது, கஅபாவிற்கு நேராக (வானத்தில்) உள்ளது. அது விழுந்தால் கஅபாவின் மீதுதான் விழும். மேலும் ஒவ்வொரு நாளும் அதில் இதற்குமுன் யாரும் பார்த்திராத  எழுபதாயிரம் வானவர்கள் நுழைகின்றனர். மக்காவிற்கு புனித எல்லை இருப்பது போன்று அதற்கும் புனித எல்லை உள்ளது. ஒவ்வொரு நாளும் அதில் எழுபதாயிரம் வானவர்கள் நுழைகின்றனர். (ஒரு தடவை நுழைந்த) அவர்கள் மீண்டும் அதில் நுழைவதில்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)