«افْتَرَقَتِ الْيَهُودُ عَلَى إِحْدَى وَسَبْعِينَ فِرْقَةً، وَافْتَرَقَتِ النَّصَارَى عَلَى اثْنَتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَفْتَرِقَنَّ أُمَّتِي عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ فِرْقَةً وَاحِدَةٌ فِي الْجَنَّةِ، وَاثْنَتَانِ وَسَبْعُونَ فِي النَّارِ» قِيلَ: يَا رَسُولَ اللهِ، وَمَنْ هِيَ؟ قَالَ: «الْجَمَاعَةُ»
129. யூதர்கள் எழுபத்தி ஒரு கூட்டமாக பிரிந்தனர். கிருத்தவர்கள் எழுபத்தி இரண்டு கூட்டமாக பிரிந்தனர்.
எனது உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! எனது சமுதாயத்தினர் எழுபத்தி மூன்று கூட்டத்தினராக பிரிவர். அவர்களில் ஒரு கூட்டத்தினர் சொர்க்கம் செல்வர். மற்ற எழுபத்திரண்டு கூட்டத்தினர் நரகம் செல்வர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர்! சொர்க்கம் செல்லும் (அந்தக்) கூட்டத்தினர் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், ஜமாஅத் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி)