أَنَّ رَجُلًا جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَقَالَ: يَا رَسُولَ اللهِ , أَيُّ النَّاسِ أَحَبُّ إِلَى اللهِ؟ وَأَيُّ الْأَعْمَالِ أَحَبُّ إِلَى اللهِ؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحَبُّ النَّاسِ إِلَى اللهِ تَعَالَى أَنْفَعُهُمْ لِلنَّاسِ، وَأَحَبُّ الْأَعْمَالِ إِلَى اللهِ تَعَالَى سُرُورٌ تُدْخِلُهُ عَلَى مُسْلِمٍ، أَوْ تَكَشِفُ عَنْهُ كُرْبَةً، أَوْ تَقْضِي عَنْهُ دَيْنًا، أَوْ تَطْرُدُ عَنْهُ جُوعًا،
وَلَأَنْ أَمْشِيَ مَعَ أَخِي فِي حَاجَةٍ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَعْتَكِفَ فِي هَذَا الْمَسْجِدِ – يَعْنِي مَسْجِدَ الْمَدِينَةِ شَهْرًا –
وَمَنَ كَفَّ غَضَبَهُ سَتَرَ اللهُ عَوْرَتَهُ، وَمَنْ كَظَمَ غَيْظَهُ، وَلَوْ شَاءَ أَنْ يُمْضِيَهُ أَمْضَاهُ مَلَأَ اللهُ قَلْبَهُ رَجَاءً يَوْمَ الْقِيَامَةِ،
وَمَنْ مَشَى مَعَ أَخِيهِ فِي حَاجَةٍ حَتَّى يَتَهَيَّأَ لَهُ أَثْبَتَ اللهُ قَدَمَهُ يَوْمَ تَزُولُ الْأَقْدَامِ»
13646. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! மக்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானவர் யார்? செயல்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது எது?” என்று கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானவர், அவர்களில் மக்களுக்கு அதிகப் பயன் அளிப்பவர் ஆவார்.
செயல்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது, ஒரு முஸ்லிமுடைய (மனதில்) நீங்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்துவது. அல்லது அவரின் ஒரு துன்பத்தை நீக்குவது. அல்லது அவரின் கடனை அடைப்பது. அல்லது அவரின் பசியைப் போக்குவது.
நிச்சயமாக, எனது ஒரு சகோதரனின் தேவைக்காக அவரோடு நான் நடந்து செல்வது, இந்த (மதீனா) பள்ளிவாசலில் ஒரு மாதம் நான் இஃதிகாஃப் (தனித்திருந்து இறைவனை வணங்குதல்) இருப்பதை விட எனக்கு மிகவும் விருப்பமானதாகும்.
எவர் தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்கிறாரோ, அவருடைய குறைகளை அல்லாஹ் மறைக்கிறான். எவர் தனது கோபத்தைச் செயல்படுத்த வாய்ப்பிருந்தும், அதை விழுங்கிக் கொள்கிறாரோ, அவருடைய உள்ளத்தை மறுமை நாளில் அல்லாஹ் நம்பிக்கையினால் (நிம்மதியினால்) நிரப்புகிறான்.
மேலும், எவர் தனது சகோதரனின் ஒரு தேவை நிறைவேறும் வரை அதற்காக அவரோடு கூடவே செல்கிறாரோ, பாதங்கள் தடுமாறும் (மறுமை) நாளில் அல்லாஹ் அவருடைய பாதத்தை உறுதிப்படுத்துகிறான்.