🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 528

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

«مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ شَهْرًا سِوَى رَمَضَانَ إِلَّا شَعْبَانَ، فَإِنَّهُ كَانَ يَصِلُهُ بِرَمَضَانَ، فَيَكُونُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ، وَكَانَ يَصُومُ الشَّهْرَ حَتَّى نَقُولَ لَا يُفْطِرُ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ لَا يَصُومُ»


528. நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தைத் தவிர வேறு எந்த மாதத்திலும் முழுமையாக நோன்பு நோற்றதில்லை.

எனினும், ஷஅபான் மாத நோன்பை ரமளான் மாத நோன்புடன் சேர்த்து தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்பார்கள்.

சில சமயம் அவர்கள் தொடர்ந்து நோன்பு நோற்றுக் கொண்டே இருப்பார்கள். அப்போது நாங்கள், “இனி அவர்கள் நோன்பை விடமாட்டார்கள்” என்று சொல்லிக் கொள்வோம். சில சமயம் அவர்கள் நோன்பை விட்டுக் கொண்டே இருப்பார்கள். அப்போது நாங்கள், “இனி அவர்கள் நோன்பு நோற்கமாட்டார்கள்” என்று சொல்லிக் கொள்வோம்.

அறிவிப்பவர்கள்: ஆயிஷா (ரலி), உம்மு ஸலமா (ரலி)