🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 5911

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

«مَنْ دَخَلَ مَسْجِدِي هَذَا لِيَتَعَلَّمَ خَيْرًا أَوْ لِيُعَلِّمَهُ، كَانَ بِمَنْزِلَةِ الْمُجَاهِدِ فِي سَبِيلِ اللهِ، وَمَنْ دَخَلَهُ لِغَيْرِ ذَلِكَ مِنْ أَحَادِيثِ النَّاسِ، كَانَ بِمَنْزِلَةِ مَنْ يَرَى مَا يُعْجِبُهُ وَهُوَ شَيْءٌ غَيْرُهُ»


5911. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னுடைய இந்த (மதீனாவின் மஸ்ஜிதுன் நபவீ) பள்ளிவாசலுக்கு, நல்லதை கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கற்பிக்க வேண்டும் என்பதற்காக ஒருவர் வந்தால் அவர் அல்லாஹ்வின் பாதையில் (போரிடும்) போராளியைப் போன்றவர் ஆவார்.

இதல்லாமல் மக்களிடம் பேசுவதற்காக ஒருவர் வந்தால் அவர் மற்றவர்களின் பொருளை ஆச்சரியத்துடன் பார்ப்பவர் போன்றவர் ஆவார்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)