🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 786

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«لَا تَضْرِبُوا إِمَاءَ اللهِ» فَتَرَكُوا ضَرْبَهُنَّ، فَجَاءَ عُمَرُ، فَقَالَ: وَاللهِ لَقَدْ ذَئِرَ النِّسَاءُ عَلَى أَزْوَاجِهِنَّ، فَأَمَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِضَرْبِهِنَّ، فَأَطَافَ بِآلِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نِسَاءٌ كَثِيرٌ، فَلَمَّا أَصْبَحَ، قَالَ: «لَقَدْ طَافَ بِآلِ مُحَمَّدٍ اللَّيْلَةَ سَبْعُونَ امْرَأَةً كُلُّهُنَّ يَشْتَكِي الضَّرْبَ، وَايْمُ اللهِ مَا أَحْسَبُ أُولَئِكَ خِيَارَكُمْ»


786.

பெண்களை அடிக்காதீர்கள்! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அதனால் பெண்கள் துணிச்சல் பெற்று (பழைய) குணம் கெட்டு கணவன்மார்களை எதிர்த்துப் பேசி சண்டையிட ஆரம்பித்தனர். இந்நிலையில், உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! பெண்களை அடிக்காதீர்கள்! என்று நீங்கள் தடையிட்டதிலிருந்து அவர்கள் குணம் கெட்டு கணவன்மார்களை எதிர்த்துப் பேசி சண்டையிடுகின்றனர் என்று முறையிட்டார்கள்.

எனவே நபி (ஸல்) அவர்கள், பெண்களை அடித்துக் கொள்ளுங்கள் என்று கூறி (அனுமதி வழங்கி)னார்கள். அந்த இரவில் கணவன்மார்கள் மனைவிமார்களை அடித்துவிட்டனர். அதனால் நபி (ஸல்) அவர்களின் வீட்டிற்கு அதிகமான பெண்கள் வந்து, கணவன்மார்கள் தங்களை அடிப்பதாகப் புகார் செய்தனர்.

எனவே, காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “சென்ற இரவில் முஹம்மதின் குடும்பத்தாரிடம் 70 வது பெண்கள் வந்து தங்களது கணவன்மார்கள் அடிப்பதாகப் புகார் கூறியுள்ளனர். அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களில் தனது மனைவியை அடிப்பவர் சிறந்தவரில்லை என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இயாஸ் பின் அப்துல்லாஹ் (ரலி)…