🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 8067

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

«مَا ضَلَّ قَوْمٌ بَعْدَ هُدًى كَانُوا عَلَيْهِ إِلَّا أُوتُوا جَدَلًا» ، ثُمَّ قَرَأَ: {مَا ضَرَبُوهُ لَكَ إِلَّا جَدَلًا بَلْ هُمْ قَوْمٌ خَصِمُونَ} [الزخرف: 58]


8067. ஒரு சமுதாயம் நேர்வழியில் இருந்த பிறகு அதிலிருந்து வழி தவறுவதற்கு, விதண்டாவாதம் செய்வது தவிர வேறெதுவும் (அவர்களுக்கு) கொடுக்கப்படுவதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு,

“எங்கள் கடவுள்கள் சிறந்தவர்களா? அல்லது அவரா?” என்று அவர்கள் கேட்கின்றனர். விதண்டாவாதம் செய்வதற்காகவே தவிர அவரைப் பற்றி அவர்கள் கூறவில்லை. இல்லை! அவர்கள் வீண் தர்க்கம் செய்வோரே!” (அல்குர்ஆன்: 43:58) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)