أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ، إِنِّي أُرِيدُ الْجِهَادَ فِي سَبِيلِ اللهِ، قَالَ: «أُمُّكَ حَيَّةٌ؟» فَقُلْتُ: نَعَمْ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْزَمْ رِجْلَهَا فَثَمَّ الْجَنَّةُ»
8162. ஜாஹிமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், நபி (ஸல்) அவர்களிடம் சென்று ”அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களுடன் போருக்கு வர நாடுகிறேன்” என்று கூறினேன். அதற்கு, நபி (ஸல்) அவர்கள் ”உனக்கு தாய் (உயிரோடு) இருக்கிறார்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நான் ”ஆம்” என்று கூறினேன். அதற்கு, நபி (ஸல்) அவர்கள் ”உன்னுடைய தாயின் இருகால்களை (அவருக்கு பணிவிடைகள் செய்வதின் மூலம்) பற்றிப் பிடித்துக் கொள். அங்கு தான் சொர்க்கம் இருக்கிறது” என்று கூறினார்கள்.