«إِنَّ أَهْلَ الْكِتَابِ افْتَرَقُوا فِي كِتَابِهِمْ عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ مِلَّةً، وَتَفْتَرِقُ هَذِهِ الْأُمَّةُ عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ مِلَّةً، يَعْنِي الْأَهْوَاءَ، كُلُّهَا فِي النَّارِ إِلَّا وَاحِدَةً وَهِيَ الْجَمَاعَةُ، وَإِنَّهُ يَخْرُجُ فِي أُمَّتِي أَقْوَامٌ تُجَارِي بِهِمُ تِلْكَ الْأَهْوَاءُ كَمَا يَتَجَارَى الْكَلْبُ لِصَاحِبِهِ، وَلَا يَبْقَى عِرْقٌ وَلَا مَفْصِلٌ إِلَّا دَخَلَهُ»
885.
(நமக்குமுன்) வேதமுடைய இரு சமுதாயத்தினரும் தங்கள் மார்க்கத்தில் எழுபத்திரண்டு பிரிவினராக பிரிந்துவிட்டனர். இந்த (முஸ்லிம்) சமுதாயம் எழுபத்தி மூன்று பிரிவினராக பிரிவார்கள். அனைவரும் நரகத்தில் இருப்பர். ஒரு கூட்டத்தைத் தவிர. அவர்கள் தான் ஜமாஅத் ஆவர். “எனது சமுதாயத்தில் சில கூட்டத்தினர் தோன்றுவார்கள். நாய் கடித்தவனுக்கு எப்படி நாடி நரம்புகளிலும் மூட்டுகளிலும் நோய் ஏற்படுகிறதோ அது போன்று அவர்களுக்கு யூத, கிருத்துவர்களின் மனோஇச்சைகள் என்ற நோய் ஏற்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.