🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 960

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

دَخَلْنَا عَلَى أَبِي مَعْبَدٍ الْجُهَنِيِّ نَعُودُهُ فَقُلْنَا: أَلَا تُعِلِّقُ شَيْئًا؟ قَالَ: الْمَوْتُ أَقْرَبُ مِنْ ذَلِكَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ عَلَّقَ شَيْئًا وُكِلَ إِلَيْهِ»


960. ஈஸா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உகைம் (ரலி) அவர்கள் நோயுற்றபோது அவர்களை நலம் விசாரிக்கச் சென்றோம். நீங்கள் தாயத் (போன்ற) ஏதாவது  அணிந்துக்கொள்ளலாமே என்று அவர்களிடம் கூறினோம்.

அதற்கு அவர்கள், தாயத் போன்றதை அணிவதற்கு மரணமே பரவாயில்லை எனக் கூறி, யார் தாயத் (போன்ற)தை தொங்க விடுகின்றாரோ அவர் அதன்பால் சாட்டப்படுவார். (அவருக்கு அல்லாஹ் பொருப்பாளனாக ஆக மாட்டான்) என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற தாம் செவியேற்றுள்ளதாக கூறினார்கள்.