🔗

bazzar-4172: 4172

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

خَرَجَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم بَعْدَ صَلاةِ الصُّبْحِ فَقَالَ: إِنَّ رَبِّي أَتَانِي اللَّيْلَةَ فِي أَحْسَنِ صُورَةٍ فَقَالَ يَا مُحَمَّدُ هَلْ تَدْرِي فِيمَ يَخْتَصِمُ الْمَلأُ الأَعْلَى؟ قَالَ: قُلْتُ: لا قَالَ: ثُمَّ ذَكَرَ شَيْئًا قَالَ: فَخُيِّلَ لِي مَا بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ قَالَ: قُلْتُ: نَعَمْ يَا رَبِّ يَخْتَصِمُونَ فِي الْكَفَّارَاتِ وَالدَّرَجَاتِ فَأَمَّا الدَّرَجَاتُ فَإِطْعَامُ الطَّعَامِ وَبَذْلُ السَّلامِ وَقِيَامُ الليل والناس نيام وأما الكفارت: فَمَشْيٌ عَلَى الأَقْدَامِ إِلَى الْجَمَاعَاتِ وَإِسْبَاغُ الْوُضُوءِ فِي الْمَكْرُوهَاتِ وَجُلُوسٌ فِي الْمَسَاجِدِ خَلْفَ الصَّلَوَاتِ، ثُمَّ قَالَ: يَا مُحَمد قُلْ تَسْمَعْ وَسَلْ تُعْطَهْ قَالَ: قُلْتُ: فَعَلِّمْنِي قَالَ: قُلِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِعْلَ الْخَيْرَاتِ وَتَرْكَ الْمُنْكَرَاتِ وَحُبَّ الْمَسَاكِينِ وَأَنْ تَغْفِرَ لِي وَتَرْحَمَنِي وَإِنْ أَرَدْتَ فِتْنَةً فِي قَوْمٍ فَتَوَفَّنِي إِلَيْكَ، وَأنا غَيْرُ مَفْتُونٍ اللَّهُمَّ أَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ وَحُبًّا يُبَلِّغُنِي حُبَّكَ.


4172. ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுபுஹ் தொழுகைக்குப் பிறகு எங்களிடம் புறப்பட்டு வந்தார்கள். பிறகு கூறினார்கள்:

“நிச்சயமாக என் இறைவன் இன்றிரவு (கனவில்) மிக அழகிய தோற்றத்தில் என்னிடம் வந்தான். பிறகு, ‘முஹம்மதே! மேல் உலகத்து வானவர்கள் எதைப் பற்றி விவாதிக்கிறார்கள் என்று நீர் அறிவீரா?’ என்று கேட்டான். அதற்கு நான், ‘இல்லை’ என்று கூறினேன். பிறகு அவன் ஏதோ ஒன்றைக் குறிப்பிட்டான். உடனே வானத்திற்கும் பூமிக்கும் இடைப்பட்டவை எனக்குத் தெளிவாக்கப்பட்டன.

பிறகு நான், ‘ஆம் என் இறைவனே! அவர்கள் பாவப்பரிகாரங்களைப் பற்றிய செயல்களையும், சொர்க்கத்தில் பதவிகள் கிடைக்கும் செயல்களைப் பற்றியும் விவாதிக்கிறார்கள்’ என்று கூறினேன்.

பதவிகளின் செயல்கள் என்னவெனில்:

உணவு அளிப்பது, ஸலாமைப் பரப்புவது, மனிதர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது இரவில் நின்று தொழுவது.

பாவப்பரிகாரங்களின் செயல்கள் என்னவெனில்:

ஜமாஅத் தொழுகைகளுக்காக நடந்து செல்வது, சிரமமான சூழ்நிலைகளிலும் உளூவை முழுமையாகச் செய்வது, தொழுகைகளுக்குப் பிறகு பள்ளிவாசல்களில் (சிறிது நேரம் திக்ர் செய்வதற்காக) அமர்ந்திருப்பது.

பிறகு இறைவன், ‘முஹம்மதே! நீர் கூறுவீராக, கேட்கப்படும்! நீர் கேட்பீராக, கொடுக்கப்படும்!’ என்று கூறினான். அதற்கு நான், ‘எனக்குக் கற்றுத் தருவாயாக!’ என்று கேட்டேன். அதற்கு இறைவன் கூறினான்: ‘நீர் இவ்வாறு பிரார்த்திப்பீராக:

‘அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக ஃபிஃலல் கைராத், வ தர்கல் முன்கராத், வ ஹுப்பல் மஸாகீன், வ அன் தஃக்பிரலீ வ தர்ஹமனீ, வ இன் அரத்த ஃபித்னதன் ஃபீ கவ்மின் ஃப தவஃப்பனீ இலைக, வ அன ஃகைரு மஃப்தூன். அல்லாஹும்ம அஸ்அலுக ஹுப்பக், வ ஹுப்ப மய் யுஹிப்புக், வ ஹுப்பய் யுபல்லிஃகுனீ ஹுப்பக்’

(பொருள்: அல்லாஹ்வே! நன்மைகளைச் செய்வதையும், தீமைகளைத் துறப்பதையும், ஏழைகளை நேசிப்பதையும், எனக்கு நீ மன்னிப்பளிப்பதையும், என் மீது நீ கருணை காட்டுவதையும் உன்னிடம் கேட்கிறேன். ஒரு கூட்டத்தில் சோதனையை நீ நாடினால், அச்சோதனையில் அகப்படாமல் உன்பால் என்னைக் கைப்பற்றிக் கொள்வாயாக! அல்லாஹ்வே! உனது அன்பையும், உன்னை நேசிப்பவர்களின் அன்பையும், உனது அன்பை அடையும்படியான நேசத்தையும் உன்னிடம் கேட்கிறேன்.)’


பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸ் நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதுபோன்ற வார்த்தைகளுக்கு நெருக்கமான அமைப்பில் பல அறிவிப்பாளர்தொடர்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் நாம், ஸவ்பான் (ரலி) அவர்களின் ஹதீஸை மட்டுமே குறிப்பிட்டுள்ளோம்; மற்ற அறிவிப்புகளில் குழப்பம் காணப்படுவதால் பிற அறிவிப்புகளை விட்டுவிட்டு இந்த ஹதீஸோடு சுருக்கிக் கொண்டோம்.

மேலும் முஆத் பின் ஜபல் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அப்துர்ரஹ்மான் பின் ஆயிஷ் (ரலி) ஆகியோர் அறிவித்துள்ள ஹதீஸ்களில் இல்லாத சில கூடுதல் செய்திகளும் இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ளன.