🔗

bazzar-8954: 8954

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

شكا الْفُقَرَاءُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم فقالوا: يا رَسولَ اللهِ الأغنياء ذهبوا بالدرجات العليا والنعيم المقيم يصلون كما نصلي ويصومون كما نصوم ولهم سوى ذلك أموال يتصدقون منها ويعتقون فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم: ألا أخبركم بشيء تدركون من سبقكم، ولاَ يدرككم من بعدكم إلاَّ من أتى بمثل ما أتيتم به؟ قالوا: نعم قال: تسبحون الله في دبر كل صلاة عشرا وتكبرون عشرا وتحمدون خمسة عشر.


8954. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஏழைகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! செல்வந்தர்கள் உயர்ந்த அந்தஸ்துகளையும், நிலையான அருட் செல்வங்களையும் பெற்றுக்கொண்டார்கள். நாங்கள் தொழுவது போலவே அவர்களும் தொழுகிறார்கள்; நாங்கள் நோன்பு நோற்பது போலவே அவர்களும் நோன்பு நோற்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு மேலதிகமாகச் செல்வங்கள் இருக்கின்றன. அவற்றின் மூலம் அவர்கள் தர்மம் செய்கிறார்கள்; அடிமைகளை விடுதலை செய்கிறார்கள்” என்று முறையிட்டனர்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுக்கு முன்னால் சென்றவர்களை நீங்கள் பிடிப்பதற்கும், உங்களுக்குப் பின்னால் வருபவர்கள் உங்களை எட்ட முடியாமல் இருப்பதற்கும் (உதவக்கூடிய) ஒரு காரியத்தை நான் உங்களுக்குச் சொல்லித்தரட்டுமா? உங்களைப் போன்றே மற்றவர்களும் செயல்பட்டாலொழிய (வேறு எவரும் உங்களை முந்த முடியாது)” என்று கூறினார்கள்.

அதற்கு அவர்கள் “ஆம் (சொல்லித் தாருங்கள்), அல்லாஹ்வின் தூதரே!” என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் நீங்கள் பத்து முறை ‘ஸுப்ஹானல்லாஹ்’, பத்து முறை ‘அல்லாஹு அக்பர்’, பதினைந்து முறை ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று கூறுங்கள்” எனக் குறிப்பிட்டார்கள்.


பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:

ரஜாஉ பின் ஹைவா —> அபூஸாலிஹ் —> அபூஹுரைரா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் இந்த ஒரு ஹதீஸை மட்டுமே நாம் அறிகிறோம்.