مَا استعاذ عبد من النار سبعا إلا قالت النار اللهم أعذه مني ولا سأل الجنة سبعا إلا قالت الجنة اللهم أسكينه إياي أو كلمة نحوها.
9681. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு அடியார், (அல்லாஹ்விடம்) நரகத்தை விட்டு காப்பாற்றும்படி ஏழுதடவை பிரார்த்தித்தால், “அல்லாஹ்வே! இவரை என்னை விட்டு காப்பாற்றுவாயாக!” என நரகம் கூறுகிறது.
ஒரு அடியார், (அல்லாஹ்விடம்) ஏழுதடவை சொர்க்கத்தைக் கேட்டு பிரார்த்தித்தால், “அல்லாஹ்வே! இவரை என்னிடம் தங்கச் செய்துவிடுவாயாக!” என்று (அல்லது இது போன்ற வார்த்தையை) சொர்க்கம் கூறுகிறது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)