قَرَأَ يَوْمَ الجُمُعَةِ عَلَى المِنْبَرِ بِسُورَةِ النَّحْلِ حَتَّى إِذَا جَاءَ السَّجْدَةَ نَزَلَ، فَسَجَدَ وَسَجَدَ النَّاسُ حَتَّى إِذَا كَانَتِ الجُمُعَةُ القَابِلَةُ قَرَأَ بِهَا، حَتَّى إِذَا جَاءَ السَّجْدَةَ، قَالَ: «يَا أَيُّهَا النَّاسُ إِنَّا نَمُرُّ بِالسُّجُودِ، فَمَنْ سَجَدَ، فَقَدْ أَصَابَ وَمَنْ لَمْ يَسْجُدْ، فَلاَ إِثْمَ عَلَيْهِ وَلَمْ يَسْجُدْ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ»
وَزَادَ نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، «إِنَّ اللَّهَ لَمْ يَفْرِضِ السُّجُودَ إِلَّا أَنْ نَشَاءَ»
பாடம்: 10
(ஒதலுக்கான) சஜ்தாவை அல்லாஹ் கடமையாக்கவில்லை என்று கருதுவோரின் கூற்று.
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடம், ஒரு மனிதர் மற்றொருவர் ஓதும் சஜ்தா வசனத்தை உட்காராமல் (போகிற போக்கில்) செவியுற்றால்… (அவர் சஜ்தாச் செய்ய வேண்டுமா?) என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அவர் உட்கார்ந்து கேட்டால்தான் என்ன? என்று திருப்பிக் கேட்டார்கள். இதன் மூலம் சஜ்தாச் செய்வது கடமையில்லை என்று அவர்கள் கருதுகிறார்கள்.
(சிலர் ஓரிடத்தில் அமர்ந்து சஜ்தா வசனத்தை ஓதி சஜ்தாச் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களைக் கடந்து சென்ற) சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள் (சஜ்தாச் செய்யவில்லை. அது குறித்து அவர்களிடம் வினவப்பட்ட போது), இதற்காக நாம் இங்கு வரவில்லை என்று பதிலளித்தார்கள். யார் (திட்டமிட்டு) அதைச் செவி தாழ்த்திக் கேட்கிறாரோ அவர் மீதே சஜ்தாக் கடமையாகும் என்று உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், தூய்மையுடன் இருந்தால்தான் சஜ்தாச் செய்ய வேண்டும். நீ உள்ளூரிலிருக்கும் போது சஜ்தாச் செய்ய நேர்ந்தால் கிப்லாவை முன்னோக்கிக் கொள். நீ பயணத்திலிருக்கும் போது (சஜ்தா வசனத்தை ஓதினால்) உனது முகம் எந்தத் திசையில் இருந்தாலும் குற்றமில்லை என்று கூறினார்கள். சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள், உரை நிகழ்த்துபவர் (சஜ்தா வசனத்தை ஓதி) சஜ்தா சஜ்தாச் செய்ததற்காக தாமும் சஜ்தாச் செய்ய மாட்டார்கள்.
1077. ரபீஆ இப்னு அப்தில்லா அறிவித்தார்.
உமர் (ரலி) ஒரு வெள்ளிக்கிழமை மிம்பரில் நின்று நஹ்ல் அத்தியாயத்தை ஓதினார்கள். (அதிலுள்ள) ஸஜ்தா வசனத்தை அடைந்ததும் இறங்கி ஸஜ்தாச் செய்தார்கள். மக்களும் ஸஜ்தாச் செய்தனர். அடுத்த ஜும்ஆ வந்தபோது அதே அத்தியாயத்தை ஓதினார்கள். அப்போது ஸஜ்தா வசனத்தை அடைந்ததும் (மக்களை நோக்கி) ‘மனிதர்களே! நாம் ஸஜ்தா வசனத்தை ஓதியிருக்கிறோம். ஸஜ்தாச் செய்கிறவர் நல்லதைச் செய்தவராவார். அவரின் மீது எந்தக் குற்றமுமில்லை’ என்று கூறினார்கள். மேலும் அவர்கள் ஸஜ்தாச் செய்யவில்லை.
நாமாக விரும்பிச் செய்தால் தவிர ஸஜ்தாவை அல்லாஹ் நம்மீது கடமையாக்கவில்லை என்று இப்னு உமர்(ரலி) கூறினார் என நாபிஃஉ குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம்: 17