🔗

புகாரி: 1404

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

خَرَجْنَا مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، فَقَالَ أَعْرَابِيٌّ: أَخْبِرْنِي عَنْ قَوْلِ اللَّهِ: {وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالفِضَّةَ، وَلاَ يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ} [التوبة: 34] قَالَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: «مَنْ كَنَزَهَا، فَلَمْ يُؤَدِّ زَكَاتَهَا، فَوَيْلٌ لَهُ، إِنَّمَا كَانَ هَذَا قَبْلَ أَنْ تُنْزَلَ الزَّكَاةُ، فَلَمَّا أُنْزِلَتْ جَعَلَهَا اللَّهُ طُهْرًا لِلْأَمْوَالِ»


பாடம் : 4 ஸகாத் கொடுக்கப்பட்ட பொருள் பதுக்கல் பொருள் ஆகாது.

ஏனெனில், ஐந்து ஊக்கியாக்களுக்குக் குறைந்த பொருட்களுக்கு ஸகாத் செலுத்த வேண்டியதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

1404. காலித் இப்னு அஸ்லம் கூறியதாவது:

நாங்கள் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) உடன் வெளியில் புறப்பட்டோம். அப்போது ஒரு கிராமவாசி, ‘யார் பொன்னையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக்கொண்டு அவற்றை இறைவழியில் செலவிடாதிருக்கிறவர்கள்… என்ற வசனத்தைப் பற்றி எனக்கு அறிவியுங்கள்’ எனக் கூறினார்.

அதற்கு இப்னு உமர்(ரலி), ‘அவற்றைப் பதுக்கி வைத்து அதற்கான ஸகாத்தைக் கொடுக்காமலிருக்கிறவருக்குக் கேடுதான். இவ்வசனம் ஸகாத் கடமையாக்கப்படுவதற்கு முன்புள்ளதாகும். ஸகாத் பற்றிய வசனம் அருளப்பட்டதும் செல்வங்களைப் பரிசுத்தமாக்கக் கூடியதாக ‘ஸகாத்தை’ அல்லாஹ் ஆக்கிவிட்டான்’ என்றனர்.
Book : 24