🔗

புகாரி: 1426

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«خَيْرُ الصَّدَقَةِ مَا كَانَ عَنْ ظَهْرِ غِنًى، وَابْدَأْ بِمَنْ تَعُولُ»


பாடம் : 18 தமது தேவைக்கு மிஞ்சிய செல்வம் உள்ளவரே தர்மம் செய்வார்.

ஒருவர் தமக்கோ தம் குடும்பத்துக்கோ, தேவை இருக்கும்போதோ அல்லது கடனிருக்கும்போதோ தர்மம் செய்தால் அது திரும்பக் கொடுக்கப்பட வேண்டும். தர்மம் செய்தல், அடிமையை விடுதலை செய்தல், அன்பளிப்புச் செய்தல் ஆகியவற்றைவிட கடனைத் தீர்ப்பதே முக்கியமானதாகும். ஏனெனில், மற்றவர்களின் பொருளை அழிக்க ஒருவருக்கு உரிமையில்லை.

யார் மக்களின் பொருளைப் பெற்று அதைச் சீரழிக்க நாடுகிறானோ அவனை அல்லாஹ் சீரழிப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

எனினும் பொறுமையாளன் என்று அறிமுகமானவனாக இருந்தால், தனக்கு வறுமை இருந்தாலும் பிறர்க்கு தர்மம் செய்யலாம். அபூபக்ர் (ரலி) அவர்கள், இவ்வாறே தமது சொத்(து முழுவ)தை(யும்) தர்மம் செய்திருக்கிறார்கள். அன்சாரிகள் தங்களைவிட முஹாஜிர் (களின் தேவை)களுக்கு முக்கியத்துவமளித்தார்கள்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் (மக்களின்) பொருட்களை வீணாக்குவதைத் தடுத்துள்ளார்கள். தர்மம் கொடுப்பதாகக் காரணம் காட்டி மக்களின் பொருட்களை வீணடிக்க யாருக்கும் உரிமையில்லை.

நான் (நபி (ஸல்) அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே! நான் செய்த தவறுக்குப் பரிகாரமாக நான் எனது செல்வம் முழுவதையும் அல்லாஹ்விடத்திலும் அவனுடைய தூதரிடத்திலும் தர்மமாக ஒப்படைத்துவிடுகின்றேன் என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உமது செல்வத்தில் கொஞ்சத்தை நீர் வைத்துக்கொள்ளும்; அது உமக்குச் சிறந்தது என்றார்கள். கைபர் போரில் கிடைத்த எனது பங்கை மட்டும் நான் எனக்காக வைத்துக்கொள்கிறேன்’ என்று நான் பதிலளித்தேன் என கஅப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். 

1426. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தேவைபோக எஞ்சியதை தர்மம் செய்வதே சிறந்ததாகும். மேலும் முதலில் உம்முடைய வீட்டாரிடமிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக!’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 24