🔗

புகாரி: 1451

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، كَتَبَ لَهُ الَّتِي فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَمَا كَانَ مِنْ خَلِيطَيْنِ، فَإِنَّهُمَا يَتَرَاجَعَانِ بَيْنَهُمَا بِالسَّوِيَّةِ»


பாடம் : 35 இருவருக்குக் கூட்டாக உள்ள பொருட்களில் ஒருவர் (தமது பொருட்களின் ஸகாத்துடன்) மற்றவருடைய பொருட்களின் ஸகாத்தையும் சேர்த்து தாமே செலுத்திவிடுவாராயின் அவர் தம் கூட்டாளியின் பங்கிற்குச் சமமான ஸகாத் தொகையைக் கணக்கிட்டு அதை அவரிடமிருந்து பெற்றுக்கொள்வார்.

இரு பங்குதாரர்கள் அவரவர் பங்குகளைப் பிரித்தறிந்திருந்தால் அவ்விருவரின் பொருட்கள் சேர்த்துக் கணக்கிடப்பட மாட்டாது என தாவூஸ், அதாஉ (ரஹ்) ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.

ஆடுகள் வளர்க்கக் கூடிய பங்காளிகளில் இவருக்கு நாற்பது ஆடுகளும் அவருக்கு நாற்பது ஆடுகளும் நிறைவாகிவிட்டாலே தவிர ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை என சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். 

1451. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கிய ஸதகாவைப் பற்றி எனக்கு அபூ பக்ர்(ரலி) எழுதும்போது, ‘இருவருக்குக் கூட்டாக உள்ள பொருட்களில் (கூட்டாளிகள் இருவரில்) ஒருவர் (தன் பொருட்களின் ஸகாத்துடன்) மற்றவருடைய பொருட்களின் ஸகாத்தையும் சேர்த்து தானே செலுத்திவிடுவாராயின் அவர் தன் கூட்டாளியின் பங்குக்குச் சமமான ஸகாத் தொகையைக் கணக்கிட்டு அதை அவரிடமிருந்து பெற வேண்டும்’ எனக் குறிப்பிட்டார்.
Book : 24