أَنَّ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ كَتَبَ لَهُ فَرِيضَةَ الصَّدَقَةِ الَّتِي أَمَرَ اللَّهُ رَسُولَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ بَلَغَتْ عِنْدَهُ مِنَ الإِبِلِ صَدَقَةُ الجَذَعَةِ، وَلَيْسَتْ عِنْدَهُ جَذَعَةٌ، وَعِنْدَهُ حِقَّةٌ، فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ الحِقَّةُ، وَيَجْعَلُ مَعَهَا شَاتَيْنِ إِنِ اسْتَيْسَرَتَا لَهُ، أَوْ عِشْرِينَ دِرْهَمًا،
وَمَنْ بَلَغَتْ عِنْدَهُ صَدَقَةُ الحِقَّةِ، وَلَيْسَتْ عِنْدَهُ الحِقَّةُ، وَعِنْدَهُ الجَذَعَةُ فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ الجَذَعَةُ، وَيُعْطِيهِ المُصَدِّقُ عِشْرِينَ دِرْهَمًا أَوْ شَاتَيْنِ،
وَمَنْ بَلَغَتْ عِنْدَهُ صَدَقَةُ الحِقَّةِ، وَلَيْسَتْ عِنْدَهُ إِلَّا بِنْتُ لَبُونٍ، فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ بِنْتُ لَبُونٍ وَيُعْطِي شَاتَيْنِ أَوْ عِشْرِينَ دِرْهَمًا،
وَمَنْ بَلَغَتْ صَدَقَتُهُ بِنْتَ لَبُونٍ وَعِنْدَهُ حِقَّةٌ، فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ الحِقَّةُ وَيُعْطِيهِ المُصَدِّقُ عِشْرِينَ دِرْهَمًا أَوْ شَاتَيْنِ،
وَمَنْ بَلَغَتْ صَدَقَتُهُ بِنْتَ لَبُونٍ وَلَيْسَتْ عِنْدَهُ، وَعِنْدَهُ بِنْتُ مَخَاضٍ، فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ بِنْتُ مَخَاضٍ وَيُعْطِي مَعَهَا عِشْرِينَ دِرْهَمًا أَوْ شَاتَيْنِ»
பாடம் : 37 ஒருவயதுடைய பெண் ஒட்டகத்தை ஸகாத்தாகச் கொடுக்க வேண்டியவரிடம் அது இல்லையென்றால்…?
1453. அனஸ்(ரலி) அறிவித்தார்.
அல்லாஹ் அவனுடைய தூதருக்குக் கடமையாக்கிய ஸகாத் பற்றி அபூ பக்ர்(ரலி) எனக்குக் கடிதம் எழுதினார்.
அதில், நான்கு வயதான பெண் ஒட்டகத்தை ஸகாத்தாகக் கொடுக்க வேண்டிய ஒருவரிடம், அது இல்லாமல் மூன்று வயதுடைய பெண் ஒட்டகம் இருந்தால் அதை அவரிடமிருந்து ஏற்கலாம்; அத்துடன் அவருக்கு சக்தி இருந்தால் அவரிடமிருந்து இரண்டு ஆடுகளை வசூலிக்க வேண்டும். அல்லது இருபது திர்கங்களை வசூலிக்க வேண்டும்.
மூன்று வயது பெண் ஒட்டகத்தை ஸகாத்தாகக் கொடுக்க வேண்டியவரிடம் அது இல்லாமல் இரண்டு வயது பெண் ஒட்டகம் இருந்தால் அதைப் பெறவேண்டும்; அத்துடன் இரண்டு ஆடுகளையோ இருபது திர்கங்களையோ (ஸகாத் அளிப்பவர்) கொடுக்க வேண்டும்.
இரண்டு வயதான பெண் ஒட்டகத்தை ஸகாத்தாகக் கொடுக்க வேண்டியவரிடம் அது இல்லாமல் மூன்று வயது பெண் ஒட்டகம் இருந்தால், அவருக்கு, வசூலிப்பவர் இருபது திர்கங்களையோ இரண்டு ஆடுகளையோ கொடுக்க வேண்டும்.
இரண்டு வயது பெண் ஒட்டகத்தை ஸகாத்தாகக் கொடுக்க வேண்டியவரிடம் அது இல்லாமல் ஒரு வயது பெண் ஒட்டகம் இருந்தால் அதைப் பெற வேண்டும். அத்துடன் இருபது திர்கங்களையோ இரண்டு ஆடுகளையோ (ஸகாத் கொடுப்பவர்) வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
Book : 24