🔗

புகாரி: 1589

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ أَرَادَ قُدُومَ مَكَّةَ: «مَنْزِلُنَا غَدًا، إِنْ شَاءَ اللَّهُ، بِخَيْفِ بَنِي كِنَانَةَ، حَيْثُ تَقَاسَمُوا عَلَى الكُفْرِ»


பாடம் : 45 நபி (ஸல்) அவர்கள் மக்காவில் தங்கிய இடம். 

1589. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மக்காவை நெருங்கியபோது, ‘அல்லாஹ் நாடினால் நாளை பனூ கினானாவின் பள்ளத்தாக்கை அடைவோம்; அது குறைஷிகள் ‘குஃப்ரின் (இறை நிராகரிப்பின்) மீது நிலைத்திருப்போம்’ என்று சத்தியம் செய்த இடமாகும்’ என்று கூறினார்கள்.
Book : 25