🔗

புகாரி: 1599

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّهُ كَانَ إِذَا دَخَلَ الكَعْبَةَ، مَشَى قِبَلَ الوَجْهِ حِينَ يَدْخُلُ، وَيَجْعَلُ البَابَ قِبَلَ الظَّهْرِ، يَمْشِي حَتَّى يَكُونَ بَيْنَهُ وَبَيْنَ الجِدَارِ الَّذِي قِبَلَ وَجْهِهِ قَرِيبًا مِنْ ثَلاَثِ أَذْرُعٍ، فَيُصَلِّي، يَتَوَخَّى المَكَانَ الَّذِي أَخْبَرَهُ بِلاَلٌ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِيهِ، وَلَيْسَ عَلَى أَحَدٍ بَأْسٌ أَنْ يُصَلِّيَ فِي أَيِّ نَوَاحِي البَيْتِ شَاءَ»


பாடம் : 52 கஅபாவினுள் தொழுவது. 

1599. நாஃபிவு அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) கஅபாவிற்குள் நுழையும்போது, நேராக நடந்து வாசலை முதுகுக்குப் பின்னாலாக்கி, எதிர் சுவருக்கு சுமார் மூன்று முழம் தள்ளி நின்று தொழுவார்கள்.

நபி(ஸல்) அவர்கள் எந்த இடத்தில் தொழுததாக பிலால்(ரலி) கூறினாரோ அந்த இடத்தில் தொழ விரும்பியே இவ்வாறு செய்வார். கஅபாவிற்குள் எத்திசையிலும் தொழுவதில் தவறில்லை.
Book : 25