«العُمْرَةُ إِلَى العُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا، وَالحَجُّ المَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلَّا الجَنَّةُ»
அத்தியாயம்: 26
உம்ரா
பாடம்: 1
உம்ராவின் அவசியமும் அதன் சிறப்பும்.
(வசதியும் வாய்ப்பும் உள்ள) யார் மீதும் ஹஜ்ஜும் உம்ராவும் கடமையாகாமல் இருப்பதில்லை என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ் குர்ஆனில், “அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்” (அல்குர்ஆன்: 2:196) என்று ஹஜ்ஜையும் உம்ராவையும் இணைத்தே கூறுகின்றான் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
1773. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் உம்ரா செய்வது மறு உம்ராவரை (ஏற்படும் சிறு) பாவங்களுக்குப் பரிகாரமாகும். (பாவச் செயல் கலவாத) ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம்: 26