🔗

புகாரி: 186

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

سَأَلَ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ، عَنْ وُضُوءِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَعَا بِتَوْرٍ مِنْ مَاءٍ، فَتَوَضَّأَ لَهُمْ وُضُوءَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ  فَأَكْفَأَ عَلَى يَدِهِ مِنَ التَّوْرِ، فَغَسَلَ يَدَيْهِ ثَلاَثًا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي التَّوْرِ، فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَاسْتَنْثَرَ، ثَلاَثَ غَرَفَاتٍ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَغَسَلَ وَجْهَهُ ثَلاَثًا، ثُمَّ غَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ إِلَى المِرْفَقَيْنِ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَمَسَحَ رَأْسَهُ، فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ مَرَّةً وَاحِدَةً، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ إِلَى الكَعْبَيْنِ


பாடம்: 39

இரு கால்களையும் கணுக்கால்கள் வரை கழுவுதல். 

186. யஹ்யா அல்மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அம்ர் பின் அபூஹஸன் (ரஹ்) அவர்களுடன் (ஒரு நாள்) நான் இருந்தேன். அவர்கள் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத்தூய்மை பற்றிக் கேட்டார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் ஒரு கல் பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, நபி (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்று அங்கத் தூய்மை செய்துக் காட்டினார்கள்:

(ஆரம்பமாக) பாத்திரத்திலிருந்த தண்ணீரைத் தமது கையில் ஊற்றி மூன்று முறை கைகளைக் கழுவினார்கள். பின்னர் தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை தண்ணீர் அள்ளி வாய்கொப்புளித்து மூக்கிற்குள் நீர் செலுத்திச் சிந்தினார்கள். மீண்டும் தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். பின்னர் தம் இரு கைகளையும் முழங்கைவரை இரு முறை கழுவினார்கள்.

பின்னர் கையை (பாத்திரத்தில்) நுழைத்து (ஈரக் கையால்) தமது தலையைத் தடவினார்கள். (அதாவது) இரு கைகளையும் முன் தலையில் வைத்து பின்னால் கொண்டுசென்றார்கள். அப்படியே பின்னாலிருந்து முன் பகுதிக்கு (ஆரம்பித்த இடத்திற்கே) கொண்டுவந்தார்கள். இவ்வாறு ஒரு தடவை மட்டுமே செய்தார்கள் (மூன்று தடவை செய்யவில்லை). பின்னர் தம் கால்களை கணுக்கால்கள் வரை கழுவினார்கள்.

அத்தியாயம்: 4