🔗

புகாரி: 187

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالهَاجِرَةِ، فَأُتِيَ بِوَضُوءٍ فَتَوَضَّأَ، فَجَعَلَ النَّاسُ يَأْخُذُونَ مِنْ فَضْلِ وَضُوئِهِ فَيَتَمَسَّحُونَ بِهِ، فَصَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ رَكْعَتَيْنِ، وَالعَصْرَ رَكْعَتَيْنِ، وَبَيْنَ يَدَيْهِ عَنَزَةٌ


பாடம் : 40 மக்கள் உளூ செய்துவிட்டு வைத்த மீதித் தண்ணீரைப் பயன்படுத்துதல்.

தாம் பல் துலக்கிவிட்டு மீதிவைத்த தண்ணீரில் உளூ செய்ய தம் வீட்டாரை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அனுமதித்தார்கள்.

187. ‘நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் நடுப்பகலில் எங்களிடம் புறப்பட்டு வந்தார்கள். அவர்களுக்கு உளூச் செய்யத் தண்ணீர் கொண்டு வரப்பட்டு அதில் அவர்கள் உளூச் செய்தார்கள். அவர்கள் மீதி வைத்த தண்ணீரிலிருந்து மக்கள் எடுத்து அதை தங்களின் மீது தடவினார்கள். நபி(ஸல்) அவர்கள் லுஹரையும் அஸரையும் இரண்டு இரண்டு ரக்அத்துக்களாக தொழுதார்கள். அவர்களுக்கு முன்னால் ஒரு கைத்தடி இருந்தது’ என அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்.
Book : 4